சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்... காரணம் இதுதான்... போக்குவரத்து காவல்துறை தகவல்!!

Published : Jan 07, 2023, 12:28 AM IST
சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்... காரணம் இதுதான்... போக்குவரத்து காவல்துறை தகவல்!!

சுருக்கம்

சென்னையில் நாளை மராத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் நாளை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ரன்னர்ஸ் மராத்தான் நெடுந்தூர ஓட்டக் குழுவினரின் சார்பாக நாளை சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 04.00 மணி அளவில் மாரத்தான் ஓட்டம் துவங்க உள்ளது.

இதையும் படிங்க: 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம்... உத்தரவு பிறப்பித்தது பள்ளிக்கல்வித்துறை!!

அந்த ஓட்டத்தில் சுமார் 15,000 பேர் வரை கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் மாரத்தான் ஓட்டம் நேப்பியர் பாலத்தில் துவங்கி திரு.வி.க பாலம், CPT Junction, டைடல் பார்க், துரைப்பாக்கம் வழியாக தாம்பரம் மாநகர காவல் எல்லையான ராஜுவ் நகர் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து சோழிங்கநல்லூர், KK சாலை, அக்கரை ( ECR) பனையூர் வழியாக MGM வந்தடைந்து வலது புறம் திரும்பி இந்திய கடல்சார் பல்கலைகழகம் அருகில் முடிவடைகிறது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும்? தேதியை அறிவித்தார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!!

எனவே வரும் 08-01-2023 ஞாயிறு அன்று அதிகாலை 04.00 மணிமுதல் 09.00 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி, சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் திரும்பி செம்மொழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். இந்நிகழ்விற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு