சென்னையில் ஜனவரி 5ம் தேதி போக்குவரத்து மாற்றம்! காரணம் என்ன?

By vinoth kumar  |  First Published Jan 3, 2025, 10:01 PM IST

ஜனவரி 5ம் தேதி சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதையொட்டி, காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 


சென்னையில் மெட்ரோ பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக முன்கூட்டியே வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை வரும் ஞாயிறு போக்குவரத்து மாற்றம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கிமீ. 32.186 கிமீ, 21.097 கிமீ மற்றும் 10 கிமீ) "FRESH WORKS CHENNAI MARATHON" ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஜனவரி 5ம் தேதி அன்று காலை 04.00 மணி முதல் (அதாவது) நேப்பியர் பாலத்திலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, ஈ.சி.ஆர், நேப்பியர் பாலத்திலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ. எலியட்ஸ் கடற்கரையிலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் அதிகாலை 03.00 மணி முதல் காலை 08.00 மணி வரை பின்வருமாறு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

போக்குவரத்து மாற்றம் விவரம்:

* காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னத்திலிருந்து காந்திசிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

* அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் காந்தி சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, வாலாஜா பாயின்ட் அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர். ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* LB சாலை X SP சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

* காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் இராஜீவ்காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

* பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

* MTC பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, ML பார்க் நோக்கி அனுமதிக்கப்படமாட்டாது.

* பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

click me!