அரை கிலோ ரூ.20! சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் வீடு தேடி வரும் காய்கறிகள்!

By SG Balan  |  First Published Dec 7, 2023, 6:46 PM IST

100 லாரிகளில் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு மழை பாதித்த பகுதிகளில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்த மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மழை பாதித்துள்ள பகுதிகளில் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் போக்குவரத்து பாதித்து காய்கறி ஏற்றி வரும் லாரிகள் நகருக்கு செல்வதில் சிக்கல் இருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

நாளை எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பு!

இதனால் வரத்து குறைந்து சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்வு காணப்படுகிறது. இதனால், அரசு சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கியுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த காய்கறி விற்பனையைத் தொடங்கி வைத்துள்ளார். 100 லாரிகளில் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு மழை பாதித்த பகுதிகளில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

பதவியேற்ற உடனே முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

click me!