மக்களே உஷார்! சென்னையில் ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழக்க இதுதான் காரணம்.. கலெக்டர் கூறிய அதிர்ச்சி தகவல்.!

By vinoth kumar  |  First Published Nov 4, 2022, 2:06 PM IST

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக  ஃபிரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் மூச்சுத்திணறி 3 பேர் உயிரிழந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் பார்வையிட்டார். 


சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக  ஃபிரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் மூச்சுத்திணறி 3 பேர் உயிரிழந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் பார்வையிட்டார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத்;- செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளம்பாக்கம் ஜெயலட்சுமி தெருவில் ஆர்.ஆர். பிருந்தாவன் எஃப்2 என்ற பெயரில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் முதல் மாடி ஒரு வருடமாக பூட்டி கிடந்துள்ளது. சமீபத்தில் கிரிஜா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் துபாயில் இருந்து நேற்றைய தினம் வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து.. உடல் கருகி 3 பேர் உயிரிழப்பு..!

undefined

ஒரு வருடத்திற்கு மேலாக இயங்காத இருந்த  ஃபிரிட்ஜை ஆன் செய்துள்ளனர். பின்னர், அதிகாலை 5 மணியளவில்  ஃபிரிட்ஜ்  வெடித்துள்ளது. அதில் இருந்து வெளியேறிய கேசின் காரணமாக 3 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறினார். வீட்டிலிருந்த கதவு ஜன்னல் அனைத்து மூடி வைக்கப்பட்டிருந்ததால் புகை வெளியேறவில்லை. 

மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதா என விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட ஆய்வில் மின்கசிவு இருப்பதாக ெதரியவில்லை. மேலும், வீட்டில் இருந்த ராஜ்குமாரின் மனைவி பார்கவி, மகள் ஆத்ரேயா ஆகிய 2 பேரும் மற்றொரு ரூமில் இருந்ததால் உயிர் தப்பினர். இரண்டு பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிங்க;-  நாளை எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை.. 11 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. வெதர் அப்டேட்

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால் நீண்ட நாட்களாக இயங்காமல் இருக்கக்கூடிய குளிர்சாதனப்பெட்டி மற்றும் ஏசியை பயன்படுத்துவதற்கு முன்பு எலக்ட்ரீஷீயனை அழைத்து பரிசோதித்து விட்டு பயன்படுத்துங்கள்.  நீண்ட நாட்களான பூட்டி கிடக்கும் வீட்டில் குடியிருக்கப் போகும் போதும் மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை முழுமையாக சரிபார்த்த பிறகு பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார். 

இதையும் படிங்க;-  பைக்கில் படம் எடுக்கும் நாகப்பாம்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ… இணையத்தில் வைரல்!!

click me!