பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் எந்த தவறு இல்லை.. உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. அமைச்சர் மா.சு

By vinoth kumarFirst Published Nov 21, 2022, 6:45 AM IST
Highlights

மருத்துவர்கள் மீது அதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அது கொலைக் குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். 

மருத்துவர்களுக்கு பாதிப்பு உள்ளது போன்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதிப்பு உள்ளது. ஆகையால் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- 2015ம் ஆண்டு வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது. தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ம் தேதி மிக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இனிமேல் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் பணியாற்றி வருகிறோம் என்றார்.

இதையும் படிங்க;- கால்பந்து வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு மா.சுப்ரமணியன் பொறுப்பேற்க வேண்டும்... அண்ணாமலை அதிரடி!!

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு காம்ப்ரஸின் பேண்ட் என்ற சொல்லப்படக்கூடிய கட்டுப் போடப்பட்டுள்ளது. இந்த கட்டு இரத்தப் போக்கை நிறுத்துவதற்கானது. அதை உடனடியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். மருத்துவர்கள் மீது அதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அது கொலைக் குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். 

இதையும் படிங்க;-  பிரியா மரண வழக்கு! கைவிரித்த கோர்ட்! போன் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு டாக்டர்கள் தலைமறைவு.. பிடிக்க 3 தனிப்படை

மேலும், மருத்துவர்களுக்கு பாதிப்பு உள்ளது போன்று, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதிப்பு உள்ளது. ஆகையால் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  மாணவி பிரியா மரணத்துக்கு காரணமான ஒருத்தரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

click me!