PMK Candidates: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு- 9 வேட்பாளர்கள் யார்.? - முழு விவரம் இதோ

By Ajmal Khan  |  First Published Mar 22, 2024, 10:07 AM IST

பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 9 வேட்பாளர்களின் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது


பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடவுள்ள பாமகவின் வேட்பாளர்களில் முதல்கட்டமாக 9 பெயர்களை கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். வேட்பாளர்கள் விவரம்:

Tap to resize

Latest Videos

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, பி.காம்
மாநிலப் பொருளாளர், பா.ம.க.

 அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல்
செய்தித் தொடர்பாளர், பா.ம.க.
தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை


ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி.,
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,


கடலூர் - திரு. தங்கர் பச்சான், டி.எஃப்.டெக்,
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,


மயிலாடுதுறை - திரு. ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்


கள்ளக்குறிச்சி - திரு. இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்.,
நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க. 

தருமபுரி - திரு. அரசாங்கம், பி.காம்.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தருமபுரி கிழக்கு மாவட்டம்

 சேலம் - திரு. ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்.,
முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க.
சேலம் தெற்கு மாவட்டம்

விழுப்புரம் - திரு. முரளி சங்கர், பி.காம்.,
மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி

click me!