ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.! சென்னையில் இன்றும், மார்ச் 26ம் தேதியும் போக்குவரத்து மாற்றம்.!

By vinoth kumar  |  First Published Mar 22, 2024, 9:29 AM IST

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல். கிரிக்கெட் போட்டிகளின் 17-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில்  நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று சேப்பாக்கத்தில் மோதுகின்றன.


ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு சென்னையில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் இன்று மற்றும் மார்ச் 26ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல். கிரிக்கெட் போட்டிகளின் 17-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில்  நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று சேப்பாக்கத்தில் மோதுகின்றன. இதேபோல், 26-ம் தேதி சென்னை அணி, குஜராத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிகளை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே இன்றும் வருகிற 26-ம் தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

1. விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு)

பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா  ஹாஸ்டல் ரோடு செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.

2. பெல்ஸ் சாலை 

பெல்ஸ்சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.
பாரதி சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம்.
வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சாந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

3. பாரதி சாலை

ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
பாரதி சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

4. வாலாஜா சாலை

M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகிசிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.

வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்லவதற்கு அனுமதி இல்லை.

B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

5. காமராஜர் சாலை

காமராஜர் சாலையில் இருந்து வரும் M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

காமராஜர் சாலையில் இருந்து வரும் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை. கண்ணகிசிலை, பாரதிசாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.

6. அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள்

*  அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை. காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

* போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

* காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!