நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக கூட்டணியில் இடம் ஒதுக்காததால் அதிருப்தியில் உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியை அதிமுக மாவட்ட செயலாளர்கள் பெஞ்சமின் மற்றும் ரமணா உள்ளிட்டு சந்தித்து ஜெகன் மூர்த்தியை சமரசம் செய்தனர்.
புரட்சி பாரத்த்திற்கு சீட் ஒதுக்காத அதிமுக
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி அறிவித்துள்ளது. அந்த வகையில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் , எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி, மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் நீண்ட நாட்களாக அங்கம் வகித்து வரும் புரட்சி பாரதம் கட்சி, தங்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜெகன் மூர்த்தி சந்தித்து பேசியிருந்தார். அப்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்க கோரிக்கை விடுத்தார்.
ஜெகன் மூர்த்தியை சமாதானம் செய்த அதிமுக
நிலையில்ஆனால் புரட்சி பாரதத்திற்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி வரும் 23ஆம் தேதி அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் அன்றைய தினம் முக்கிய அரசியல் முடிவு எடுக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களுமான பெஞ்சமின் மற்றும் பி வி ரமணா உள்ளிட்டோர் சென்னை நந்தனத்தில் உள்ள புரட்சி பாரதம் அலுவலகத்திற்கு சென்று ஜெகன் மூர்த்தியை சந்தித்து சமரசம் செய்தனர். இருந்த போதும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து தங்கள் முடிவை தெரிவிப்பதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.