நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம். ! ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்

By Ajmal Khan  |  First Published Mar 22, 2024, 12:30 PM IST

நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.


சின்னத்தை இழந்த சீமான்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருந்த நிலையில், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி டெல்லி உயர்நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையின் போது, நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு ஒரு சின்னத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி பதிவு செய்ததன் அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

Tap to resize

Latest Videos

undefined

புதிய சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்

இதனையடுத்து புதிய சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கேட்டிருந்த நிலையில் அந்த கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல சுயேட்சை கட்சிகளுக்கு எந்த எந்த சின்னம் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாளை சென்னையில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மைக் சின்னத்தை சீமான் அறிமுகம் செய்துவைக்கவுள்ளார்.

இதையும் படியுங்கள்

RN RAVI vs Ponmudi : உச்சநீதிமன்றம் விதித்த கெடு.. பொன்முடிக்கு பதவி பிரமாணத்திற்கு ஒப்புக்கொண்ட ஆளுநர் ரவி

click me!