சென்னையில் பாஸ்பரஸ் வெடித்து ப்ளஸ் 2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
சென்னையில், பாஸ்பரஸ் வெடித்ததில் பிளஸ் 2 பள்ளி மாணவர் உயிரிழந்துள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜிகேஎம் காலனி பகுதியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. வேதியியலில் அதிக ஆர்வம் கொண்ட பிரணவ் என்ற மாணவர் பாஸ்பரஸ் வேதிப் பொருளைக் கொண்டு சோதனை செய்ய முயற்சித்தார் என்று கூறப்படுகிறது.
அப்போது பாஸ்பரஸ் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் அக்கம்பக்கத்தில் இருந்த ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் மட்டுமின்றி, அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேதியல் பொருள் வெடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.