நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ள நிலையில், இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குகிறார்.
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது முதல் கட்டமாக 9 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
அரசியலில் தங்கர் பச்சான்
இதில் பாமக சார்பாக கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டையில் பிறந்தவர் தங்கர் பச்சான், விவசாய குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவர். தங்கர் பச்சானின் தந்தை தெருக்கூத்துக் கலைஞராக இருந்தவராவர். பல்வேறு திரைப்படங்களில் தங்கர் பச்சான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
யார் இந்த தங்கர் பச்சான்.?
அழகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தங்கர்பச்சான், பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். விவசாயத்திற்கு ஆதரவான தனது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் தங்கள் பச்சானை பாமக கடலூரில் வேட்பாளராக இறங்கியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கடலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளதாகவே கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
PMK Candidates: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு- 9 வேட்பாளர்கள் யார்.? - முழு விவரம் இதோ