அந்த மழை வெறும் ட்ரெய்லர்... இரவில் பிய்த்துக் கொண்டு ஊத்தப்போகுது வானம்..!

Published : Aug 24, 2019, 05:35 PM IST
அந்த மழை வெறும் ட்ரெய்லர்... இரவில் பிய்த்துக் கொண்டு ஊத்தப்போகுது வானம்..!

சுருக்கம்

பிற்பகலில் சென்னையில் பரவலாக ஒரு சில நிமிடங்கள் மிதமான மழை பெய்தது வெறும் டிரெய்லர்தான். இன்று மாலை அல்லது இரவில் மழை பிய்த்துக் கொண்டு ஊற்றப்போவதாக தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.   

பிற்பகலில் சென்னையில் பரவலாக ஒரு சில நிமிடங்கள் மிதமான மழை பெய்தது வெறும் டிரெய்லர்தான். இன்று மாலை அல்லது இரவில் மழை பிய்த்துக் கொண்டு ஊற்றப்போவதாக தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில், ’’சென்னையில் இன்று மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் மிகச் சிறந்த நாளாக இது அமைந்துள்ளது. தற்போது லேசான தூறல் போட்டுச் சென்றது. ஆனால் இன்று மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 3 நாட்களாக சென்னையின் வடக்கு அல்லது தெற்கு பகுதிகளில் மழை பெய்திருக்கலாம். ஆனால் இன்று சென்னையில் பரவலாக மழை பெய்யும் நாளாக அமைந்துள்ளது. இயற்கையே இன்று சென்னையே சமமாக பாவித்து மழையைப் பொழியும். இன்று காலையிலேயே மழையைக் கொடுக்கும் மீன் போன்ற மேகக் கூட்டங்கள் காணப்பட்டன. அதுவே மழைக்கான அறிகுறியாக அமைந்துவிட்டது.

இனி வரும் நாட்களிலும் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தினமும் மழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது. ஆனால் அது பரவலான மழையாக அமைய வேண்டும் என்றால் அதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். எனவே, இன்று மாலை அல்லது இரவில் வெளியே கிளம்புவதாக இருந்தால் கையில் குடையுடன் செல்வது நல்லது’’ என அவர் தெரிவித்தார்.
 
PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!