பரிசோதனை நடத்த வந்தா மறைக்காமல் உண்மையை சொல்லுங்க... பொதுமக்களுக்கு அட்வைஸ் பண்ணும் மாநகராட்சி ஆணையர்..!

By vinoth kumarFirst Published Jun 19, 2020, 4:25 PM IST
Highlights

சென்னையில் தப்பியோடிய 299 கொரோனா நோயாளிகளில் 150 பேர் மீட்கப்பட்டு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தப்பியோடிய 299 கொரோனா நோயாளிகளில் 150 பேர் மீட்கப்பட்டு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்;- கடந்த 3 மாதங்களில் சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து நாள்தோறும் வீடு, வீடாக சென்று அறிகுறிகள் அறியப்பட்டது. சென்னையில் மருத்துவ முகாம் மூலம் 40,000க்கும் அதிகமானோருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது. முழு ஊடரங்கில் 90 சதவீதம் மக்கள் வீட்டில் இருப்பார்கள் என்பதால் சோதனை அதிகரிக்கப்பட உள்ளது. 

வீடு தேடிவரும் பணியாளர்களிடம் அறிகுறி இருந்தால் மறைக்காமல் மக்கள் கூற வேண்டும். களப்பணியாளர்களிடம் சிலர் அறிகுறிகளை மறைப்பதால் கொரோனா கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வீடு வீடாக சென்று அறிகுறிகள் கண்டறிய 11,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அறிகுறி உள்ளதை மக்கள் முன்கூட்டியே தெரிவித்திருந்தால் கொரோனா இறப்புகளை தடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். 

மேலும், பேசிய அவர் சென்னையில் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு உதவ 4000 தன்னார்வலர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சம் வீடுகள் தனிமையில் கண்காணிப்பில் உள்ளன. சென்னையில் தப்பியோடிய 299 கொரோனா நோயாளிகளில் 150 பேர் மீட்கப்பட்டு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி நடத்தும் மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா மண்டலத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தனிமை முகாம் பயன்பாட்டுக்காக அண்ணா பல்கலைக்கழகம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். பேரிடர் விதிப்படி பல்கலைக்கழகம்  விடுதிகளை கட்டாயம் ஒப்படைத்துதான் ஆக வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

click me!