5 பாடத்திலும் பெயில் ஆனாலும் பாஸ் தான்.. அதிரடி அறிவிப்பு வெளியீடு.. குஷியில் 10,11ம் வகுப்பு மாணவர்கள்..!

By vinoth kumarFirst Published Jun 19, 2020, 1:46 PM IST
Highlights

10, 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். 

10, 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். 

கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என கூறி இருந்தார்.

இந்நிலையில், 10ம் மற்றும் 11ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். ஆகையால்,  அந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது குறித்து கேள்வி எழுந்தது. 

இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஒரு மாணவன் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் அந்த மாணவர் தேர்ச்சி பெற்றவராகவே கருதப்படுவார் என்றார். அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

click me!