முழு ஊரடங்கிற்கு தயாரான சென்னை.. அண்ணா சாலை மூடல்.. இ-பாஸ் செல்லாது.. காவல் ஆணையரின் முழு பேட்டி..!

By vinoth kumarFirst Published Jun 18, 2020, 6:10 PM IST
Highlights

சென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மக்கள் கேட்காததால் கடந்த ஊரடங்கில் வாகனங்களை பறிமுதல் செய்தோம். ஆனால், இந்த முறை நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம் என்றார். திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது. போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது. சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர் சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது. அனுமதி  இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். தினசரி பணியாளர்கள் சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை. சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.  10 சதவீதம் காவலர்களை காத்திருப்பில் வைத்துள்ளோம், 18000 காவலர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும்  ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். 

click me!