#BREAKING வேதனையான மிகப்பெரிய சாதனை... நேற்று ஒரேநாளில் மதுவிற்பனை இத்தனை கோடியா?

By vinoth kumarFirst Published May 9, 2021, 11:45 AM IST
Highlights

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.426. 24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.426. 24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ நெருங்கி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10ம் தேதி காலை முதல் 24ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு ஊரடங்கு காரணமாக குடிமகன்கள் பாதிக்காத வகையில் 2 நாட்கள் டாஸ்டாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் செயல்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக மதுவகைகளை வாங்கி இருப்பு வைக்க டாஸ்மாக் கடைகளில் நேற்று ஏராளமான குடிமகன்கள்  குவிந்தனர். அட்டை பெட்டிகள், சாக்குப்பை, பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை கொண்டுவந்து மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால், டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.426. 24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடியும், திருச்சி ரூ.82.59 கோடியும், சேலம் ரூ.79.82 கோடி, கோவை ரூ.76.12 கோடியும் விற்பனையாகியுள்ளது. 

click me!