#BREAKING நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம் .. நாளைமுதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்.. போக்குவரத்து தொழிற்சங்கம்.!

Published : Feb 24, 2021, 06:39 PM ISTUpdated : Feb 24, 2021, 06:45 PM IST
#BREAKING நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம் .. நாளைமுதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்.. போக்குவரத்து தொழிற்சங்கம்.!

சுருக்கம்

நாளை முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும். பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்து கழகம் அனுப்பிய நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் கூறியுள்ளனர். 

நாளை முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும். பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்து கழகம் அனுப்பிய நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் கூறியுள்ளனர். 

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வில் கால தாமதத்தை சரி செய்ய வேண்டும், தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, பிப்ரவரி 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று மாலை 4.00 மணிக்கு ஆலோசனை நடத்தினர். 

இதனையடுத்து,  ஆலோசனைக்கு பிறகு போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நாளை முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும். பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்து கழகம் அனுப்பிய நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம். அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் பேசவில்லை. 

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை

நாளை அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் ஓழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். பணி ஓய்வு, வார ஓய்வு, மாற்றுப்பணி ஓய்வுக்கு அனுமதி பெற்றவர்களுக்கு அனுமதி ரத்து. போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை பணிக்கு வர வேண்டும். மாற்று ஓய்வு பின்னர் அறிவிக்கப்படும். நாளை விடுப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் விடுப்பு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!