உயர்ந்தது ஊதியம்... ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 23, 2021, 6:22 PM IST
Highlights

இந்த நிலையில், தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5000 லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்படுகிறது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுக அரசு பல்வேறு சலுகைகள், திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு அதிரடி அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் 21 ஆயிரத்து 600 விற்பனையாளர்கள், 3 ஆயிரத்து 800 எடையாளர்கள் ஆகியோரின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதில், ரேஷன் ஊழியர்களின் சம்பள உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5000 லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்படுகிறது. ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600-ரூ.29,000 வழங்கப்படும். மேலும், கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250 லிருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800-ரூ.26,000 வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!