5 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப் போகும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 20, 2021, 1:39 PM IST
Highlights

கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாகவும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும்,  கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாகவும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னயைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி கோத்தகிரியில் 9 சென்டிமீட்டர் மழையும், குன்னூரில் 7 சென்டிமீட்டரும், சோத்துப்பாறையில் 6 சென்டிமீட்டரும், அலகாரியில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னையில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு கொளத்தூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. 

click me!