நாளை தமிழ்நாடு உருவாகிய நாள்..! முதல்முறையாக கொண்டாடப்பட ஏற்பாடுகள் தீவிரம்..!

By Manikandan S R SFirst Published Oct 31, 2019, 3:31 PM IST
Highlights

நாளை தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செய்து வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மொழிவாரி அடிப்படையில் 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி பிரிக்கப்பட்டன. இதற்காக தியாகி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்திருந்தார். அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதே போன்று தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக தமிழ் உணர்வாளர்களால் அரசிடம் வைக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கபடும் என்றும் உத்தரவிட்டார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1 ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு 10 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் நாளை தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செய்து வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற இருக்கிறது.

click me!