கோவிலில் கஞ்சா அடித்துவிட்டு பூஜைக்கு வரும் பெண்களிடம் கில்மா வேலை பார்த்த பூசாரி...!! கண்டித்த ஐசிஎப் ஊழியர் வெட்டி கொலை

By Ezhilarasan BabuFirst Published Oct 31, 2019, 11:17 AM IST
Highlights

கோவிலுக்கு வரும் பெண்களிடம் ஓம் பிரகாஷ்  தவறான நோக்கத்தில் பேசி பேசிவந்ததை ஜானகிராமன் கண்டித்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த  பூசாரி ஓம் பிரகாஷ்  கஞ்சா போதையில் தனது நண்பர்களுடன் வந்து கொலை செய்தது தெரியவந்தது.

சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் ஜானகி ராமன்(50). இவர் ஐசிஎப்-ல் பிட்டராக பணியாற்றி வந்தார். ஐசிஎப் அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபாவளி தினத்தன்று இரவு 10.00 மணியளவில் அளவில் பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்மேடு சுடுகாடு அருகே, தனது இருசக்கர வாகனத்தில் நண்பர் தயாளன் உடன் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து அவரது தலையில் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

கொலைக்குறித்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரவள்ளூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை தொடர்பாக செம்பியம் உதவி ஆணையர் சுரேந்தர் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து  விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ஜானகி ராமன் அப்பகுதியில் உள்ள ஸ்ரீதேவி இளங்காளியம்மன் கோவிலில் செயலாளராக இருந்து வந்துள்ளார் .
 

தீபாவளி அன்று  சிறப்புப் பூஜையின்போது கோவில் பூசாரியான ஓம் பிரகாஷ்(23) என்பவர் கஞ்சா போதையில் கோயிலுக்குள் வந்ததுள்ளார். இதை ஜானகி ராமன் கண்டித்து கோவில் பூசாரியைக் கோவிலை விட்டு வெளியேற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தலைமுறை தலைமுறையாக கோவிலை ஓம் பிரகாஷின் மூதாதையர் நடத்தி வந்த நிலையில் கோவிலை அறநிலை துறை கட்டுபாட்டில் கொண்டுவந்ததில் ஜானகிராமனுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும்,

 

கோவிலுக்கு வரும் பெண்களிடம் ஓம் பிரகாஷ்  தவறான நோக்கத்தில் பேசி பேசிவந்ததை ஜானகிராமன் கண்டித்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த  பூசாரி ஓம் பிரகாஷ்  கஞ்சா போதையில் தனது நண்பர்களுடன் வந்து கொலை செய்தது தெரியவந்தது. 
ஜானகி ராமன் கொலை சம்பந்தமாக போலீஸார் ஓம் பிரகாஷ், அனீஸ், குமரன், சரத்குமார், விஜய், ரவிபிரசாத்
,சர்போஜி ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

click me!