சுஜித்தின் டி.என்.ஏ. மாதிரி எடுக்கப்பட்டுள்ளது...! வீண் வதந்திகளை கிளப்ப வேண்டாம்... எச்சரிக்கும் அதிகாரி..!

By vinoth kumarFirst Published Oct 30, 2019, 5:05 PM IST
Highlights

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலை காட்சிப்படுத்தாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், குழந்தையின் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலை காட்சிப்படுத்தாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், குழந்தையின் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களைபேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சுர்ஜித் மீட்புப் பணியில் கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது களப் பணியாளர்களை கவலையடைய செய்துள்ளது. ஒவ்வொரு நொடியும் உயிருடன் குழந்தையை மீட்க வேண்டும் என்று தான் அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். துரதிஷ்டவசமாக குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

சுஜித் மீட்புப் பணிகள், மீட்டது தொடர்பாக அவரது பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியும். மீட்புப் பணியின் போது துர்நாற்றம் வீசியதால்தான், மீட்புப் பணிகளை நிறுத்திவிட்டு, குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் உடல் மீட்கப்பட்டது. அதுவும் பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது. கும்பகோணம் தீ விபத்து குழந்தைகளின் படங்களை காட்சிப்படுத்தியதால் பல விமர்சனங்கள் ஏற்பட்டது. அதனால் சுஜித் படங்களை வெளியிடவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

 

சுஜித்தை தன்னால் மீட்க முடியும் என்று லக்னோவில் இருக்கும் ஒருவர் கூறினார். அவர் அங்கிருந்து வருவதாகக் கூறியதால் அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டது. அனைத்து முயற்சிகளும் சரியாக எடுக்கப்பட்டன என்றார். குழந்தையின் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து குழந்தை எப்போது இறந்தது என்ற போன்ற விவரங்கள் தெரியவரும். இதற்கு மேல் இது குறித்து பேசுவது விதிமுறைக்கு மாறாக இருக்கும்.

இந்திய அளவில் இருக்கக்கூடிய அனைத்து வகையான உபகரணங்களையும் பயன்படுத்தி தான் மீட்பு பணிகள் நடைபெற்றன. மனிதனால் முயன்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இது குறித்து மேலும் விவாதிப்பது விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும். சுஜித் மாதிரியான இறப்புகள் இனி இருக்கக்கூடாது. ஆகையால் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

click me!