ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தின் உடல் முழுமையாக மீட்கப்பட்டதா..? ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்...!

By vinoth kumarFirst Published Oct 30, 2019, 12:51 PM IST
Highlights

சுர்ஜித் மீட்புப் பணிகள், மீட்டது தொடர்பாக அவரது பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியும். மீட்புப் பணியின் போது துர்நாற்றம் வீசியதால்தான், மீட்புப் பணிகளை நிறுத்திவிட்டு, குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் உடல் மீட்கப்பட்டது. அதுவும் பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே சுஜித் உடல் மீட்கப்பட்டது.

போர்வெல் என்பது விபத்துதான், பேரிடர் அல்ல, சுர்ஜித்தை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடலை காட்சிப்படுத்தாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சுர்ஜித் மீட்புப் பணியில் கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது களப் பணியாளர்களை கவலையடைய செய்துள்ளது. 

சுர்ஜித் மீட்புப் பணிகள், மீட்டது தொடர்பாக அவரது பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியும். மீட்புப் பணியின் போது துர்நாற்றம் வீசியதால்தான், மீட்புப் பணிகளை நிறுத்திவிட்டு, குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் உடல் மீட்கப்பட்டது. அதுவும் பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது. கும்பகோணம் தீ விபத்து குழந்தைகளின் படங்களை காட்சிப்படுத்தியதால் பல விமர்சனங்கள் ஏற்பட்டது. அதனால் சுர்ஜித் படங்களை வெளியிடவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். 

சுர்ஜித்தை தன்னால் மீட்க முடியும் என்று பஞ்சாப்பில் இருந்து ஒருவர் கூறினார். அவர் பஞ்சாப்பில் இருந்து வருவதாகக் கூறியதால், அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டது. மனிதர்களால் எடுக்க முடியும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டது. மீட்புப் பணியில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மீட்புப் பணியில் பல கோடி செலவானதாக வரும் தகவல் முழுவமும் வதந்தி என்றார். போர்வெல் என்பது விபத்துதான், பேரிடர் அல்ல, சுர்ஜித்தை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது என்றார்.

click me!