தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் பாதிப்பு, உயிரிழப்பு புதிய உச்சம்... கொதறிய கொரோனாவால் தடுமாறும் தலைநகர்..!

By vinoth kumarFirst Published Jun 9, 2020, 6:48 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1685ஆக உயர்ந்துள்யதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,914ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1685ஆக உயர்ந்துள்யதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,914ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.  இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அதேவேளையில் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,914ஆக உயர்ந்துள்ளது. 

இதில், சென்னையில் மட்டும் 1,243 பேர் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 798ஆக உள்ளது. எனவே குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18,325ஆக அதிகரித்துள்ளது. இன்று 21 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 307ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 10வது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

click me!