குஷியான செய்தி.. 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ்.. மதிப்பெண்கள் கணக்கீடு முறை எப்படி தெரியுமா.?

By vinoth kumarFirst Published Jun 9, 2020, 1:26 PM IST
Highlights

தமிழகத்தில் 10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும்,  காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் மற்றும் வருகைப் பதிவை பொருத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள 12-ம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

click me!