மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்!!

Published : Sep 03, 2019, 05:01 PM ISTUpdated : Sep 03, 2019, 05:04 PM IST
மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்!!

சுருக்கம்

தமிழகத்தில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் 1478 உதவியாளர், கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுடைய ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.


 
பணி: உதவியாளர், கிளார்க்

வயதுவரம்பு: 01.01.2001 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளியில் தமிழை கட்டாய பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு பற்றி தெரிந்திருத்தல் அவசியம்

விண்ணப்பக் கட்டணம்:  தேர்வு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்துமிடம்: அந்தந்த மாவட்ட கூட்டுறவு தலைமையகம் மற்றும் கிளைகளில் செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்பட்ட கட்டண ரசீதை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமாக பதிவேற்ற வேண்டும்.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமாக எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள "SBI Collect" என்கிற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உதாரணமாக தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.drbdharmapuri.net என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

சம்பளம்: குறைந்தபட்ச சம்பளம் மாதம் 11,900 ரூபாய் அதிகபட்ச சம்பளம் 32,450 ரூபாய்

விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், தேர்வு நடைபெறும் நாள், மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் முழுமையான விபரங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளதளத்தில் இருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!