இப்படியே இருக்கனும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகளின் கவலை!!

Published : Sep 03, 2019, 12:37 PM ISTUpdated : Sep 03, 2019, 12:38 PM IST
இப்படியே இருக்கனும் பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகளின் கவலை!!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருக்கிறது. இதே நிலை நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது. அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமல் சீராக சென்று கொண்டிருக்கும். அது போல கடந்த 5 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.80 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் 68.94 ரூபாயாக இருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய கூட வேண்டாம், மீண்டும் மீண்டும் உயர்த்தப்படாமல் இருந்தாலே போதும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!