அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம்.. மத்திய அரசு எச்சரிக்கை..!

Published : Aug 11, 2020, 07:38 PM IST
அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகம்.. மத்திய அரசு எச்சரிக்கை..!

சுருக்கம்

மத்திய மற்றும் மாநில சராசரியைவிட இறப்பு விகிதம் அதிகம் உள்ளதாக 16 மாவட்டங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், சென்னை, காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திய மற்றும் மாநில சராசரியைவிட இறப்பு விகிதம் அதிகம் உள்ளதாக 16 மாவட்டங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், சென்னை, காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் தினசரி சராசரியாக 6000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், அது தற்போது குறைந்து 5000ஐ என்ற அளவில் குறைந்துள்ளது. நோய்த்தொற்று குறைந்திருப்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும் கூட உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து  உயர்ந்து 100 முதல் 120 என்ற அளவில் உள்ளது. 

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மத்திய மற்றும் மாநில இறப்பு விகிதங்களை பொறுத்த வரை தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி தேசிய அளவில் இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக உள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.64  சதவீதமாக உள்ளது. 

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா முழுவதும் 16 மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 8 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த விகிதங்களை காட்டிலும் சென்னை,  காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 

சென்னையில் மட்டும் 2,272 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்படி இறப்பு விகிதம் 2.12 சதவீதமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 274 மரணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது. திருச்சியில் 69 , விருதுநகரில் 116 பேரும், காஞ்சிபுரத்தில் 142, தேனியில் 86, ராணிப்பேட்டை 45 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் சிகிச்சை முறைகளை முறையாக பின்பற்றி இறப்பு விகிதங்களை குகை்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..
தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்! உருக்கமாக பேசிய நடிகை மீரா மிதுன்! அதிரடி காட்டிய கோர்ட்!