கொரோனாவின் கொட்டத்தை அடக்கி கெத்து காட்டும் தமிழ்நாடு..! கட்டுக்குள் வந்த பாதிப்பு.. அதிகமான டிஸ்சார்ஜ்

Published : Aug 11, 2020, 06:36 PM IST
கொரோனாவின் கொட்டத்தை அடக்கி கெத்து காட்டும் தமிழ்நாடு..! கட்டுக்குள் வந்த பாதிப்பு.. அதிகமான டிஸ்சார்ஜ்

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,649ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,649ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், இன்று 67,492 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5834 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,649ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே தினமும் ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே உறுதியாகிவருகிறது. இன்று 986 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,11,054ஆக அதிகரித்துள்ளது. கோவை, தேனி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை செய்யப்படும் போதிலும், பாதிப்பு குறைந்துள்ளதுடன் சேர்த்து, மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று 6005 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,50,680ஆக அதிகரித்துள்ளது. 

52810 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று 118 பேர் உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 5159ஆக அதிகரித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!