தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகள் வரை தேர்வுகள் ரத்து...? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Mar 19, 2020, 1:34 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. இத்தேர்வுகள் முடிந்ததும் மொத்தமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமல் நேரடி தேர்ச்சி வழங்குவது பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 8000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- சரவணா ஸ்டோர்ஸ் அலுவலகத்துக்கு சீல்... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. இத்தேர்வுகள் முடிந்ததும் மொத்தமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், பாடங்களை நடத்தாமல் விடுமுறை விடுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  ஆண் நண்பர்களுடன் பழக்கம்... காதல் மனைவி மீது தீராத சந்தேகம்... கடுப்பில் கொடூரமாக கொலை செய்த கணவர்..!

இந்நிலையில், தமிழக பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்புகள் வரை தேர்வு இல்லாமல் 'ஆல் பாஸ்' என்ற முழு தேர்ச்சி அறிவிப்பை வெளியிடுவது பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அனைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை தேர்வை ரத்து செய்து 'ஆல் பாஸ்' அறிவித்துள்ளது. அதே முடிவை தமிழக அரசும் பின்பற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!