சரவணா ஸ்டோர்ஸ் அலுவலகத்துக்கு சீல்... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

By vinoth kumarFirst Published Mar 18, 2020, 10:40 AM IST
Highlights

கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள், நீச்சல் குழந்தைகள் அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. உத்தரவை மீறி திறந்தால் சீல் வைக்கப்படும் என்றும் மாநாகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தவை மீறி செயல்பட்ட சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ்க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. உத்தரவை மீறி திறந்தால் சீல் வைக்கப்படும் என்றும் மாநாகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் வணிக வளாகம் நேற்று தடையை மீறி திறக்கப்பட்டது. அதன்பின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையால் பிற்பகல் 2 மணியளவில் மூடப்பட்டது. இதனையடுத்து மலை 4 மணியளவில் சரவணா ஸ்டோர்ஸ் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே சரவணா ஸ்டோர் வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!