டெங்கு மாநிலமாகும் தமிழகம்...!! 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...!! உயிர் பயத்தில் மக்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2019, 5:47 PM IST
Highlights

பல்வேறு வகையான காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில்  டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது, அங்கு இதுவரையில் சிறுவர் மற்றும் சிறுமிகள் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 
 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்காய்ச்சல் வேகமாக  பரவிவருவதுடன், தமிழக சுகாதாரத் துறையால் அதை கட்டுப்படுத்த  முடியாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருப்பதால், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என அனைத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 792 பேர் டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னையில் 124 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் 10 பேர், சிவகங்கையில் 12 பேர், கள்ளக்குறிச்சியில் 28 பேர், கோவையில் 6 குழந்தைகள் உட்பட 30 பேர் என டெங்கு காய்ச்சலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக மொத்தத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு  காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் உடன் சேர்ந்து வைரஸ் காய்ச்சலும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பல்வேறு வகையான காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில்  டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது, அங்கு இதுவரையில் சிறுவர் மற்றும் சிறுமிகள் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

திருவள்ளூர் மருத்துவமனையில் மட்டும் 23 பேர் டெங்கு காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கம் போல டெங்குவை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியதே இந்தாண்டு அதன் தாக்கம் அதிகரித்துள்ளதற்கு காரணம் என பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 
 

click me!