பிரபல உணவக சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... அதிர்ந்து போன வாடிக்கையாளர்..!

By vinoth kumarFirst Published Oct 16, 2019, 1:27 PM IST
Highlights

சென்னையில் பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடும் போது அதில் புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அனுப்பியுள்ளார். 

சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது, பிரியாணியில் இருந்த சிக்கனில் நெளிந்தபடி புழுக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பாக உணவ நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். ஆனால், அதற்கு உணவகம் தரப்பில் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேறு உணவு தருவதாக தெரிவித்தனர். பின்னர், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உணவைப் போட்டோ எடுத்து அதை உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளர்.

இந்நிலையில், உணவகம் தரப்பில் கூறுகையில், சிக்கனில் புழு இருந்ததற்கு கோழியை விற்ற கடைக்காரரே காரணம். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். உணவில் புழு இருப்பதை அடுத்து பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

click me!