கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் - அன்புமணி கோரிக்கை

By Velmurugan s  |  First Published Jan 6, 2024, 11:43 AM IST

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்ல போதிய இணைப்பு பேருந்துகள் இல்லாததால் மெட்ரோ பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்ட புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதிகள் இல்லாமல் கடுமையான நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கோயம்பேடு புறநகர்  பேருந்து முனையத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையின் வட எல்லையான எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கிளாம்பாக்கத்தில் இருந்து 50 கி.மீக்கு மேல் பயணிக்க வேண்டும்.

#BREAKING: இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணியின் மாநில மாநாடு.. புதிய தேதி அறிவிப்பு!

Tap to resize

Latest Videos

undefined

ஆனால், அதற்குத் தேவையான அளவில் இணைப்பு பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை. வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள்  சென்னைக்கு செல்வதற்கும், சென்னையிலிருந்து வெளியூர் செல்ல வேண்டிய மக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்கும் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி; காளையர்களை பதம் பார்க்கும் காளைகள்

2-ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் நிதி இல்லை என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டி பாதை இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 2-ம் கட்ட மெட்ரோ தொடர்வண்டித் திட்டம், கிளாம்பாக்கம் தொடர்வண்டித் திட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.

விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை முறையாக திட்டமிட்டு மேற்கொண்டால் 6 மாத காலத்தில் முடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

click me!