தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு... மீறினால் கடும் நடவடிக்கை..!

By vinoth kumarFirst Published Oct 23, 2019, 1:20 PM IST
Highlights

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு படுவதை தவிர்க்கும் வகையில், தீபாவளி நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என 2018-ம் ஆண்டு 
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று, 2018 தீபாவளி நாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வடரையும், மாலை, 7 மணிமுதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டது. தடையை மீறி கடந்த ஆண்டு பட்டாசு வெடித்த பொதுமக்கள் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். 

இதையும் படிங்க;-  ஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..!

இந்தாண்டு தீபாவளி பண்டிகை, 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு கூறுகையில், தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

click me!