வேறு வழியே இல்லை.. இதுக்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வு.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சம்

By vinoth kumarFirst Published Apr 16, 2021, 6:35 PM IST
Highlights

தமிழகத்தில் ஒரேநாளில் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 33ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் ஒரேநாளில் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 33ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில்  8,449 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,71,384ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 4வது நாளாக கொரோனா தொற்றால் 2,636 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,77,300ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 97,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,09,76,696 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 5,116 பேர் ஆண்கள், 3,333 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,86,363 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,84,985 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 4,920 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,96,759ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 18 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,032ஆக அதிகரித்துள்ளது. தற்போது 61,593 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள்  கணிசமாக உயர்த்தப்பட்டு வருவதால் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. கொரோனா தொற்றால் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி தினந்தோறும் உயரும் கொரோனா தொற்றால் தமிழக அரசு லாக்டவுன் நடவடிக்கைகளை கையில் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. 

 

click me!