கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.. இந்த நோய் தாக்க வாய்ப்பு.. மருத்துவ குழு பகீர்..!

By vinoth kumar  |  First Published Jun 18, 2021, 10:04 AM IST

இந்த கருப்பு பூஞ்சை நோயினை ஆரம்பத்திலே கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் 13 மருத்துவ வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தக் குழுவானது, தமிழக அரசிடம் ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 


கருப்பு பூஞ்சை தாக்காமலிருக்க கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநகர் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவிவரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிகை குறைந்து, குணமடைகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் கீழ் சென்றுவிட்டது.

Latest Videos

undefined

இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வட மாநிலங்களில் அதிகமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கருப்பு பூஞ்சை நோய் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், அதிக அளவில் ஸ்டிராய்டு மருந்து எடுத்துகொள்பவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது. மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆம்போடெசிவர்-பி மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த கருப்பு பூஞ்சை நோயினை ஆரம்பத்திலே கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் 13 மருத்துவ வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்தக் குழுவானது, தமிழக அரசிடம் ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், கருப்பு பூஞ்சை தாக்காமல் இருக்க கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மருத்துவ வல்லுநர் குழு அறிவுரை வழங்கியுள்ளது.

click me!