IT Raid: ரூ.1000 கோடி வருவாயை மறைத்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்.. புட்டு புட்டு வைத்த வருமான வரித்துறை..!

By vinoth kumarFirst Published Dec 7, 2021, 2:01 PM IST
Highlights

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில்  நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது போல் சோதனையில் ரூ. 10 கோடி பணமும், ரூ. 6 கோடி தங்க நகைகள், கட்டிகள்,  கணக்கில் கட்டாத ரூ.150 கோடி மதிப்புள்ள ஜவுளி, நகைகள், வாடகை ரசீது, பழைய பொருட்கள் விற்பனை  மூலம் கிடைத்த ரூ.7 கோடி மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில்  நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தியாகராயநகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் கடைகள் இயங்கி வருகிறது. சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் பகுதிகளில் கிளைகள் உள்ளன. 

கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாகயும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்தன. இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 37 இடங்களில் கடந்த 1ம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது 4 நாட்களுக்கு நீடித்தது. சோதனை முடிந்த இடங்களில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தில் தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு விவரத்தை வருமான வரித்துறையினர் தெரிக்காமல் இருந்தனர். 

தற்போது இதன் விவரம் வெளியாகியுள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில்  நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது போல் சோதனையில் ரூ. 10 கோடி பணமும், ரூ. 6 கோடி தங்க நகைகள், கட்டிகள்,  கணக்கில் கட்டாத ரூ.150 கோடி மதிப்புள்ள ஜவுளி, நகைகள், வாடகை ரசீது, பழைய பொருட்கள் விற்பனை  மூலம் கிடைத்த ரூ.7 கோடி மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!