ஆசிரியர்களை பாத்ரூமுக்குள் வைத்து பூட்டிய மாணவர்கள்.. எதற்கு தெரியுமா? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய கல்வித்துறை.!

By vinoth kumar  |  First Published Sep 1, 2022, 11:14 AM IST

சென்னை திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 


சென்னையில் ஆசிரியர்களை கழிவறையில் பூட்டி சென்ற சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்களை கைது செய்து அவர்களை சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 

சென்னை திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் அங்கு பாடம் நடத்தும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் நடப்பதாக புகார் எழுந்தது. மேலும் ஆசிரியர்கள் கழிப்பறை செல்லும் போது கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இளம்பெண்ணுக்கு அந்த இடத்தில் கை வைத்து டார்ச்சர்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! டாக்டர் மிரட்டல்

undefined

இந்த சம்பவம் தொடர்பாக சக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அந்த மூன்று மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். ஆனால், ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக மற்ற மாணவர்களை துன்புறுத்தினார்கள். இதை தட்டிக் கேட்ட ஆசிரியர்களை மிரட்டினார்கள். மேலும் மற்ற வகுப்புகளில் சென்று அமர்ந்து ஆசிரியர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி அனைவரையும் தொந்தரவு செய்தனர். 

இந்நிலையில், கடந்த வாரம் 3 மாணவர்களும் சேர்ந்து சில ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டினார்கள். இதை ஆசிரியர்கள் கண்டித்த போது மீண்டும் அவர்களை மிரட்டினார்கள். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்களையும் கைது செய்து கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  இரண்டு முறை கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான மனைவி.. 3வது முறையாக என்ன நடந்தது தெரியுமா?

click me!