எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் அதிர்ச்சி சம்பவம்... மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

Published : Jan 13, 2021, 01:08 PM IST
எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் அதிர்ச்சி சம்பவம்... மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

சுருக்கம்

எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கிய மருத்துவ மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கிய மருத்துவ மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்  இந்து (27). செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிடிஎஸ் முடித்துவிட்டு, பல் மருத்துவம் மேற்படிப்பான எம்டிஎஸ் படித்து வந்தார். அதே பல் மருத்துவமனை கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படவில்லை. இதனையடுத்து, சந்தேகமடைந்த ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில், இந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த மாதம் 11ம் தேதி மாரடைபால் திடீரென உயிரிழந்தார்.

. இதனால் அவர், மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, மருத்துவமனை நிர்வாகத்தின் நிர்ப்பந்தம் காரணமாக தற்கொலை செய்தாரா, வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றார். கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்ஆர்எம் கல்லூரியில் மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?