குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..!

By vinoth kumarFirst Published Jan 5, 2021, 4:04 PM IST
Highlights

தமிழகத்தில் இம்மாதம் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் இம்மாதம் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறும். குறிப்பாக, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழா நாட்களில் ரூ.240 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் பெரும் பொருளாதார இழப்பை அரசு சந்தித்தது. 

இதையடுத்து, மே மாதம் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்தது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய கடைகளில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 137 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 34.55 கோடிக்கும், குறைந்தபட்சமாக சேலம் மண்டலத்தில் ரூபாய் 24.19 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில், ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- ஜனவரி 15-ம் தேதி திருவள்ளூவர்  தினம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம், ஜனவரி 28-ம் தேதி வடலூர் ராமலிங்கனார் (வள்ளலார்) நினைவு தினத்தையொட்டி, இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால், குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

click me!