ரத்தாகும் முக்கிய ரயில்கள்.. சென்னை மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!!

By Asianet TamilFirst Published Sep 21, 2019, 5:49 PM IST
Highlights

பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மின்சார ரயில்சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் மின்சார ரயில் சேவை. சென்னை கடற்கரை - தாம்பரம் வரையிலும், வேளச்சேரி - கடற்கரை வரை என இரு மார்க்கமாக மின்சார ரயில்கள் சேவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை தாம்பரம் முதல் எழும்பூர் வரை செல்லும் மின்சார ரயில்கள் நாளை காலை 11.15 முதல் மாலை 3.15  வரை நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12.00, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2.00, 2.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, மதியம் 12.00, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3.00, 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.00, 11.50, மதியம் 12.30, 1.00, 1.45, 2.15, 2.45, அரக்கோணத்துக்கு மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1.00, 1.50, திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.40, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் என மொத்தம் 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நாளை காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.15, திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 6, தாம்பரம், அரக்கோணத்துக்கு தலா 1 என சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. 

இவ்வாறு ரயில்வே துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!