எழுபதை கடந்த டீசல் ரேட்.. எகிறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் விலை.. கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!!

Published : Sep 21, 2019, 10:45 AM IST
எழுபதை கடந்த டீசல் ரேட்.. எகிறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் விலை.. கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் +0.31 காசுகள் உயர்ந்து 76.24 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் +0.26 காசுகள் உயர்ந்து 70.33 ரூபாயாக இருக்கிறது.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தது. எண்ணெய் கிடங்குகளில் ஏற்பட்ட பாதிப்பு நீங்க ஒரு சில வாரங்கள் ஆக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 ரூபாயில் இருந்து 6 ரூபாய் வரையில் விலை உயர இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்