சென்னையில் பயங்கரம்.. கொசுவை விரட்ட வீட்டில் புகை.. மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்..!

By vinoth kumarFirst Published Jul 22, 2021, 6:25 PM IST
Highlights

பல்லாவரம் அருகே கொசுவை விரட்டுவதற்காக போட்ட புகைமூட்டதால் மூச்சு திணறி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை உட்பட 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பல்லாவரம் அருகே கொசுவை விரட்டுவதற்காக போட்ட புகைமூட்டதால் மூச்சு திணறி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை உட்பட 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பொன்னிநகர் திருவள்ளூவர் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(60). குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி புஷ்பவள்ளி (55). மகள் மல்லிகா மற்றும் பேரன் விஷால் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதனால், நேற்றிரவு வழக்கம் போல அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும் படுகைக்கு தயாரானார்கள்.

அப்போது கொசுக்களை விரட்ட வீட்டில் சொக்கலிங்கம் புகை போட்டுள்ளார். பின்னர், அனைவரும் தூங்க சென்றனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அதிகமான புகை எழுந்தது. இதில், அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைவரும் படுக்கையிலேயே மயங்கினர். 

இன்று காலையில் வெகுநேரமாகியும் சொக்கலிங்கம் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டி பார்த்தனர். எந்த சத்தமும் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 4 பேரும் படுக்கையில் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பவள்ளி உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. 3 பேரும் முதலுதவி அளித்த பிறகு மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

click me!