சென்னை அண்ணா சாலையில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..!

By vinoth kumarFirst Published Jul 22, 2021, 4:07 PM IST
Highlights

சென்னை அண்ணா சாலையில் உள்ள 5 மாடிக்கொண்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள 5 மாடிக்கொண்ட கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சென்னை, அண்ணா சாலையில்  உள்ள சாந்தி திரையரங்கள் அருகே உள்ள 5 மாடிக்கொண்ட ஜி.ஜி காம்ப்ளக்‌ஸ் உள்ளது. இதில், 3வது மாடியில் தேவராஜ் கம்பியூட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உதிரி பாகங்கள் மொத்த விற்பனை கிடங்கில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்கிலும் பரவியது. இதனால், அங்கிருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. 

உடனே இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு  4 தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். மேலும்,  கட்டிடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதனையடுத்து, சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நேரிட்டக் கட்டடத்தில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தீ விபத்து, மீட்புப் பணிகளை சாலையில் செல்வோர் நின்று பார்த்ததால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

click me!