சிவானந்தா குருகுலத்தின் பொதுச்செயலாளர் ராஜாராம் உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை தாம்பரம் அடுத்து இருக்கும் காட்டாங்குளத்தூரில் சிவானந்தா குருகுலம் செயல்பட்டு வருகிறது. இதன் பொதுச்செயலாளராக 1967ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ராஜாராம்(67) பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1945 ஆண்டு தொடங்கப்பட்ட சிவானந்தா குருகுலத்தில் பெற்றோர் இல்லாத பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டு வருகிறது.
undefined
ராஜாராமின் பொதுசேவைகளை பாராட்டி மத்திய அரசு சார்பாக முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணன் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ராஜாராம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உடல் காட்டாங்குளத்தூரில் இருக்கும் சிவானந்தா குருகுலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராஜாராமின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள், குருகுல குழந்தைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கில் போலீசார் குவிப்பு..! பதற்றத்தில் தலைமை செயலகம்..!