
வீடு, வீடாக தண்ணீர் கேன்
சென்னையில் 11ம் வகுப்பு மாணவனை 5 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஆடுதொட்டி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(15). 11வகுப்பு படித்து முடித்துவிட்டு 12ம் வகுப்பு செல்ல உள்ளார். கோடை விடுமுறை என்பதால் அருகில் இருக்கக்கூடிய ஒரு கடையில் வீடு, வீடாக தண்ணீர் கேன் போடும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல சஞ்சய் தண்ணீர் கேன் போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
சரமாரி அரிவாள் வெட்டு
அப்போது திடீரென வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மொத்தம் 10 இடங்களில் அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தை அடுத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள்
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெட்டிய 5 பேரும் இவரது நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.