தலைநகர் சென்னையில் நேற்று டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தபோதிலும் சரக்கு விற்பனை அமோகமாக நடந்து வந்தது. சென்னையின் கொரட்டூரைச் சுற்றி இருக்கும் மதுபான கடைகளில் விடுமுறை நாளன்று சட்டத்திற்கு புறம்பாக மதுவிற்பனை நடந்துள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் வள்ளலார் நினைவு தினமான நேற்று மூடி வைக்க வேண்டும் என்றும் அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அரசு சார்பாக உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தலைநகர் சென்னையில் நேற்று டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தபோதிலும் சரக்கு விற்பனை அமோகமாக நடந்து வந்தது. சென்னையின் கொரட்டூரைச் சுற்றி இருக்கும் மதுபான கடைகளில் விடுமுறை நாளன்று சட்டத்திற்கு புறம்பாக மதுவிற்பனை நடந்துள்ளது. பல கடைகளில் காலை 7 மணி முதலே குடிமகன்கள் திரண்டு வந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர். கொரட்டூர் காவல்நிலையம் அருகே இருக்கும் ராயல் பார் ஒன்றில் பொதுமக்களுக்கு தெரியும்வகையில் மது விற்பனை நடந்து வந்துள்ளது.
நேற்று மட்டுமின்றி பிற நாட்களிலும் இந்த கடைகளில் 24 மணி நேரம் மது விற்பனை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றுகின்றனர். மது விலை இருமடங்கு உயர்த்தி விற்கப்பட்டபோதும் குடிமகன்கள் தாராளமாக அவற்றை வாங்கி செல்கின்றனர். மேலும் காலை நேரங்களிலும் விடுமுறை தினங்களிலும் கூட குடித்து விட்டு அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு மதுபிரியர்கள் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிடுகிடுவென குறையும் பெட்ரோல்,டீசல் விலை..! உற்சாகத்தில் வாகன ஓட்டிகள்..!