டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருகிறது அதிரடி மாற்றம்..! முறைகேட்டை தடுக்க புதிய சீர்திருத்தங்கள்..!

By Manikandan S R SFirst Published Feb 7, 2020, 6:18 PM IST
Highlights

கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல் பெறும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதை தடுப்பதற்காக தற்போது அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி பின்பற்றப்பட இருக்கிறது. புதிய சீர்திருத்த விபரங்கள்:

*ஒரே நபர் பல விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதை தடுக்கும் வகையில் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. 

*தேர்வு குறித்த அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு தேர்வர்களின் விபரங்கள் இணையத்தில் வெளியிடப்படவுள்ளது.

*தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது தேர்வு மைய விருப்பமாக 3 மாவட்டங்களை தேர்வு செய்யலாம். தேர்வாளர்களுக்கு சிரமமில்லாத வகையில் தேர்வாணையமே மையங்களை ஒதுக்கும்.

* கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல் பெறும் நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும்.

*நிரப்பப்பட்ட இடங்கள், மீதியிருக்கும் காலியிடங்கள் ஆகியவற்றின்  விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.

*தேர்வெழுத வரும் தேர்வாளர்கள் கைரேகை, ஆதார் ரேகையுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்படும்.

*தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைக் தடுப்பதற்காக உயர்ரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

Also Read: 276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!

click me!