மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு.. சைதை துரைசாமி வேதனையுடன் அறிவிப்பு.!

By vinoth kumar  |  First Published Feb 6, 2024, 12:47 PM IST

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இந்நிலையில், தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சட்லெஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி வேதனையுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இந்நிலையில், தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: சட்லஜ் ஆற்றில் பாய்ந்த கார்.! சைதை துரைசாமியின் மகன் மாயம்.. தேடும் பணி திடீர் நிறுத்தம்.. கைவிரித்த போலீஸ்.!

இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், வெற்றி துரைசாமி மாயமானார். அவரை தேடும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பத்திர பதிவா.?பல கோடி ரூபாய் வசூலித்து அசத்திய பத்திர பதிவு துறை- அடுத்த இலக்கு என்ன?

இந்நிலையில் காணாமல் போன வெற்றி துரைசாமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி வேதனையுடன் அறிவித்துள்ளார். மேலும் சட்லஜ் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பழக்குடியின மக்களிடமும் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிந்ததால் உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். 

click me!